திருமலை மாவட்ட தமிழரசு கட்சி உறுப்பினர்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு

திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் அனைவரும் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு தமது ஆதரவை வழங்க ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக தெரிவித்தனர்.

திருகோணமலையில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சியின் காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை   இடம்பெற்ற சந்திப்பிலேயே ஏகமனதாக குறித்த தீர்மானம் எட்டப்பட்டதாக தெரிவித்தனர்.

குறித்த சந்திப்பில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தலைமையில், ஒன்று கூடிய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரும்  தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு அவரின் சங்கு சின்னத்தில் வாக்கு சேகரிப்பதற்கு ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டதாகவும், தமது பிரதேச மக்களின் ஏக மனதான முடிவு இதுதான் எனவும், ஆகையினால் தாம் அனைவரும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சங்கு சின்னத்துக்கு ஆதரவளிப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.

மேலும், இதுபோன்று இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுவும் ஒன்று கூடி தமிழ் பொது வேட்பாளராகிய அரியநேத்திரனுக்கு தமது ஆதரவினை வழங்கி சங்கு சின்னத்துக்கு வாக்களிப்பதற்கு தீர்மானம் எட்ட வேண்டும் என இதன் போது கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்