![](https://minnal24.com/wp-content/uploads/2025/01/Untitled-3.png)
-மூதூர் நிருபர்-
திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் களப்புக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவரொருவரை காணவில்லை. தேடுதல் பணிகள் பிரதேச மீனவர்களால் முன்னெடுக்கப்பட்டபோதிலும் இதுவரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லையென ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
மீன்பிடிக்கச் சென்ற தோணி களப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் தோணியொன்றில் மீன்பிடிக்கச் சென்ற இலச்கைத்துறை முகத்துவாரத்தைச் சேர்ந்த மகேந்திரன் (வயது -53) என்ற மீனவரே காணாமல் போயுள்ளனர்.அத்தோடு அவர் மீன் பிடிப்பதற்கு பயன்படுத்திய தோணி உள்ளிட்ட உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவர் தோணியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மற்றுமொரு படகு மோதி படகில் வந்தோர் தப்பித்துச் சென்றிருக்கலாம் இதனால் தோணி கடலில் புரண்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.அதேவேளை குறித்த மீனவரின் தோணியில் சேதங்கள் இருப்பதையும் காணமுடிந்தது.
இன்று மாலை வரை பிரதேச மீனவர்கள் காணாமல்போன மீனவரை தேடியும் இதுவரை சடலம் கண்டெடுக்கப்படவில்லை.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்