திருமண ஊர்வலத்தை பார்த்துக்கொண்டிருந்த இருவர் உயிரிழப்பு
திருமண ஊர்வலத்தைப் பார்த்துக்கொண்டிருந்த இரண்டு மூதாட்டிகள் உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின்-பீகார் மாநிலத்தில் நடைபெற்ற திருமண விருந்து ஒன்றின் பின்னர் நடைபெற்ற திருமண ஊர்வலத்திலேயே இவ்வாறு இடம்பெற்றுள்ளது.
மணமகன் திருமண காரை ஓட்டிச் சென்றதுடன், அவர்களது திருமண ஊர்வலத்தை பார்த்துக் கொண்டிருந்த இரு மூதாட்டிகள் மீது மணமகனின் கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
60 மற்றும் 70 வயதுடைய இரண்டு மூதாட்டிகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.