
திருமணம் முடிந்ததும் விவாகரத்து கோரிய மணப்பெண்!
புதிதாக திருமணம் செய்த ஜோடி ஒன்று திருமணமான அடுத்த நாளே விவகாரத்திற்கு விண்ணப்பித்துள்ளது. இதன் பின்னணியில் இருப்பது கேக் என்றால் நம்புவதற்கு சற்று கடினமாக இருக்கலாம். ஆனால் அதுதான் நடந்திருக்கிறது. இதுதொடர்பான மணமகளின் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
மணமகள் தன்னைப்பற்றிய குறிப்புகள் எதையும் தெரிவிக்கவில்லை. அவரும் அவரது ஆண் நண்பரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே கடந்த ஆண்டு கிறிஸ்துமஸிற்கு முன்பு திருமணம் நடந்தது. இதற்கு முன்பாக திருமணத்தின்போது அங்கு மகிழ்ச்சிக்காக பரிமாறப்படும் கேக்கை தனது முகத்தில் தேய்க்கக் கூடாது என்று காதலனிடம் அந்தப் பெண் கோரிக்கை வைத்திருந்தார்.
அட இவ்வளவுதானா! என்று கேட்ட காதலனும், திருமணத்தின் போது அப்படி ஏதும் நடக்காது என்று வாக்குறுதி அளித்திருந்தார். இந்த சூழலில் இருவருக்கும் இடையே திருமணம் உற்சாகத்துடன் நடைபெற்றது. அப்போது தான் அளித்த வாக்குறுதிக்கு மாறாக அந்த காதலன், திருமண கேக்கை அள்ளி எடுத்து, காதலியின் முகத்தில் பூசி தேய்த்துள்ளார். இந்த நிகழ்வு காதலிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
மணமகள் இதனை சாதாரண நிகழ்வாக கடந்து விடாமல் ஒரு வாக்குறுதி மீறப்பட்டதாக உணர்ந்தார். இந்த செயல் அவரை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி துன்பத்தை கொடுத்தள்ளது. பலரது முன்னிலையில் தான் என்ன செய்வது என்பதை அறியாமல் மணமகள் திகைத்துள்ளார். அப்போது மறுநாளே விவகாரத்து பெற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.
கேக் பூசப்பட்டது காதலனின் அக்கறையின்மை மற்றும் மரியாதைக் குறைவுக்கான சான்று என்று அந்த மணமகள் கருதியுள்ளார். இதைத் தொடர்ந்து அந்த நபரிடம் இருந்து டைவர்ஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளார் மணமகள். இந்நிலையில் இதுகுறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்த அவர் விரைவில் தனக்கு விவாகரத்து கிடைத்து விடும் என்று கூறியுள்ளார். திருமண கேக்கால் நடந்த சம்பவம் ஒன்று விவாகரத்தில் முடிந்திருக்கும் கதை இணையவாசிகள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
