திருமணம் செய்து கொள்ளுமாறு தமது ஊழியர்களை வற்புறுத்தும் நிறுவனம்!

சீனாவில் உள்ள ஒரு நிறுவனம், தனது ஊழியர்களை திருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தியிருக்கிறதென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“இந்த மார்ச் மாத இறுதிக்குள் திருமணம் செய்துகொள்ளுங்கள். இல்லாவிட்டால் வேலையைவிட்டு வெளியேற்றப்படுவீர்கள்” என்று தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், மார்ச் மாதத்துக்குப் பிறகு திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தால் தங்களைப் பற்றி சுய விமர்சனக் கடிதம் ஒன்றையும் நிறுவனத்துக்கு அளிக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி ,1200 ஊழியர்களுக்கு இவ்வாறு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், இதற்கு ஊழியர்கள் மற்றும் பல்வேறு தரப்பிலிருந்து கடும் ஆட்சேபனை எழுந்ததால்,  உள்நாட்டு மனிதவள மற்றும் சமூகப் பாதுகாப்பு பணியகத்தின் தலையீட்டின் பின் அந்நிறுவனம் இவ் அறிவிப்பை நிராகரித்துள்ளாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24