திருமணம் செய்து ஒன்பது மாதங்களில் இளம் பெண்ஒருவர் உயிரிழந்துள்ளார் .

யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை பதிவு திருமணம் செய்து 9 மாதமேயான இளம் பெண் ஒருவர் உயிர் இழந்துள்ளார்.

பண்டத்தரிப்பு காலையடி பகுதியைச் சேர்ந்த குபேந்திரன் சாயினி (வயது – 29) என்ற பெண்ணே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.

ஜேர்மனி நாட்டில் வாழ்ந்து வரும் இளைஞர் ஒருவரை ஒன்பது மாதங்களுக்கு முன்னர் பதிவுத்திருமணம் செய்த நிலையில் நுரையிரலில் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந் நிலையில் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்று உயிரிழந்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்