
திருமணமாகி ஏழு மாதங்கள்: குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு
மட்டக்களப்பு சந்திவெளி மாவடிவேம்பு பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் நேற்று சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டடுள்ளார்.
பண்ணை வீதி மாவடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த கணபதிப்பிள்ளை லிங்கேஸ்வரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் திருமணம் முடித்து வாழ்ந்து வந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தனது மனைவியை விட்டு பிரிந்து தனது தாயாருடன் வாழ்ந்து வந்த இவர் நேற்று தாயாரின் வீட்டில் யாரும் இல்லாத போது தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
