
திருமணத்திற்கு மறுத்த காதலன்: காதலனை கடத்திய காதலி
பின்வத்த பிரதேசத்தில் திருமணம் செய்ய மறுத்த காதலனை கடத்திச் சென்றமை தொடர்பில் கடத்தப்பட்டதாக கூறப்படும் இளைஞனின் தாயார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் யுவதி ஒருவரை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பின்வத்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடத்தப்பட்ட இளைஞனும் தேடப்படும் யுவதியும் காதலித்து வந்துள்ளனர். எனினும் குறித்த இளைஞன் யுவதியை திருமணம் செய்து கொள்ள விரும்பாத காரணத்தினால் பின்வத்த பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் மேலும் சிலருடன் வந்த யுவதி இளைஞனை கடத்திச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத வீடொன்றில் மறைத்து வைத்து மீண்டும் விடுவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடத்தலை மேற்கொண்டதாக கூறப்படும் யுவதி மற்றும் அவருடன் வந்த நபர்களை கண்டறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
