திருமணத்திற்கு புல்டோசரில் வந்த மணமகன்: அபராதம் விதித்த பொலிஸார்!
இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலம் பிடுல் மாவட்டம் ஜலர் கிராமத்தை சேர்ந்த சிவில் இன்ஜினியர் அங்குஷ் ஜெய்ஸ்வால் என்பவர் தனது திருமணத்திற்காக திருமண மண்டபத்திற்கு புல்டோசர் மூலம் வந்துள்ளார்.
மணமகன் ஜெய்ஸ்வாலுடன் அவரது உறவினர்களான இரு பெண்களும் புல்டோசர் முன் அமர்த்து திருமண மண்டபத்திற்கு வந்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் புல்டோசர் சாரதி மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்ததுடன், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்