
திருட்டு போன நீர் இறைக்கும் மோட்டார்களுடன் சந்தேக நபர் கைது
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் நெல்லியடியில் நீர் இறைக்கும் மோட்டார்கள் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து 5 தண்ணீர் இறைக்கும் மோட்டர்கள் மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிசார் தெரிவித்தனர்.
துன்னாலை குடவத்தைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் நெல்லியடிப் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
குறித்த நபரை பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்த உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
