திருடிய பணத்தை சூதாடிய திருடன்

கட்டுஸ்தோட்டையில் மருந்தகம் ஒன்றை உடைத்து பணப்பெட்டகத்தை திருடிச் சென்ற சந்தேக நபர் இன்று திங்கட் கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கட்டுகஸ்தோட்டை நகரில் உள்ள மருந்தகம் உடைக்கப்பட்டு பெட்டகம் திருடப்பட்டுள்ளதாகவும், அதில் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் இருந்ததாகவும் மருந்தக உரிமையாளர் கட்டுகஸ்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி, சந்தேக நபரை கைதுசெய்த போது பெட்டியில் இருந்த பணத்தை எடுத்து சூதாடியதாக சந்தேக நபர் பொலிஸில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சந்தேக நபரிடம் விசாரணை மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.