திருடிக்கொண்டு தப்ப முயன்று கிணற்றுக்குள் விழுந்த திருடன்

அம்பாறை அலவ்வ பகுதியில் நேற்று வியாழக்கிழமை நள்ளிவு வீட்டினுள் நுளைந்து அங்கிருந்த பணம் மற்றும் கைத்தொலைபேசியை திருடிவிட்டு தப்பிச் செல்லும் போது அங்கிருந்த கிணற்றினுள் விழுந்து திருடன் ஒருவன் மாட்டிக்கொண்டுள்ளான்.

திருடன் பணத்தையும் பொருட்களையும் திருடும் சந்தர்ப்பத்தில் வீட்டு உரிமையாளர் விழித்துக்கொண்டதாகவும் அதனையடுத்து திருடன் தப்பிச்சென்ற போது வீட்டின் பின்புறம் வலையால் மூடப்பட்டிருந்த கிணற்றில் தவறி வீழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அலவ்வ பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் அங்கு சென்ற பொலிஸார் ஏணியை வைத்து திருடனை மீட்டெடுத்து கைது செய்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்