திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் இணையத்தில் விற்பனை

கம்பஹா மாவட்டத்தில் ஹோகந்தர வடக்கில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை இணையத்தில் விற்பனை செய்த இருவரை பொரலஸ்கமுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் 25 மற்றும் 26 வயதுடைய ஹோகந்தர வடக்;கு பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட போது, ஹெரோயின் 12 கிராம் மற்றும் 400 மில்லிகிராமும் இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, விற்பனை செய்யப்பட்ட 6 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.