திருடப்பட்ட மாட்டின் இறைச்சியுடன் சந்தேக நபரை கைது செய்த பொலிஸார்

-சம்மாந்துறை நிருபர்-

அம்பாறையில் திருடப்பட்ட மாட்டின் இறைச்சியுடன் சந்தேக நபர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

புதிய வளத்தாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேக நபரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் மேய்ச்சலுக்கு சென்ற ஏழு மாதத்திற்கு உட்பட்ட கன்று நேற்று திங்கட்கிழமை இரவு காணாமல் போனதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை மாட்டின் உரிமையாளர் முறைப்பாடு செய்யதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

முறைப்பாட்டின் அடிப்படையில் தேடுதலை மேற்கொண்ட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபரின் வீட்டினை சோதனை செய்த போது அறை ஒன்றினுள் மாட்டை அறுத்து இறைச்சியாக்கும் சந்தர்ப்பத்தில் மாட்டிறைச்சியுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதான சந்தேக நபரிடம் இருந்து 47 கிலோ 600 கிராம் மாட்டிறைச்சி மீட்கப்பட்டதுடன், சந்தேக நபர் மற்றும் மாட்டினை வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்