திருடச் சென்ற வீட்டில் குறட்டைவிட்டு தூங்கிய திருடன்

வீடொன்றில் திருடச் சென்ற திருடன் அந்த வீட்டிலேயே குறட்டைவிட்டு தூங்கிய சம்பவம் ஒன்று தென்மேற்கு சீனாவில் இடம்பெற்றுள்ளது.

குறித்து வீட்டுக்குள் இரவில் திருட சென்ற திருடன், வீட்டிலுள்ள அனைவரும் உறங்காமல் இருப்பதனை கண்டுள்ளார்.

இதனால் அவர்கள் உறங்கும் வரை காத்திருக்கலாம் என ஒரு அறையில் இரகசியமாக காத்திருந்துள்ளார்.

சிறிது நேரத்தின் பின்னர் குறித்த திருடனுக்கு தன்னை அறியாமலேயே தூக்கம் வரவே அவர் அங்கு நித்திரை கொண்டுள்ளார்

பின்னர், வீட்டில் இருந்த நபர்களும் உறங்குவதற்காக சென்றுள்ளனர்.

சிறிது நேரத்தின் பின்னர் யாரோ ஒருவர் குறட்டை விடுவது போன்ற சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் கண் விழித்துள்ளனர்.

பின்னர் வீட்டில் உள்ள அறைகளை சோதித்த பொழுது, குறித்த திருடன் குறட்டை விட்டு தூங்குவதனை கண்டுள்ளனர்.

பின்னர் அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.