
திருச்செந்தூர் முதியோர்சங்க கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா
திருச்செந்தூர் முதியோர்சங்க கட்டிடத்திற்காக அடிக்கல்நாட்டும் வைபவம் இன்று ஞாயிற்றுக்கிழமை 10 மணியளவில் கல்லடியில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு கல்லடி வாழ் மக்களுக்கு நீண்டகால தேவையக இருந்த இந்த கட்டடத்திற்கான அடிக்கல்லானது பூஜை புணஸ்காரங்களுடன் இன்றைய தினம் நாட்டி வைக்கப்பட்டது.
இதில் பிரதமஅதிதியாக முன்னாள் மாகாணசபை பிரதிதவிசாளரும் ரெலோ கட்சியின்
தேசிய அமைப்பாளருமான பிரசன்னா இந்திரகுமார் கலந்து கொண்டார். சிறப்பு அதிதிகளாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரத்தினம் மற்றும் முன்னாள் சேவாலங்கா பொறுப்பாளர் நாகராஜா கல்லடி முதியோர் இல்லத்தின் தலைவர் சா. அருன்மொழி சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
