திருக்கோவில் மாணவன் உயிரிழப்பு: கல்வி திணைக்களத்தின் அறிவிப்பு

அம்பாறை – திருக்கோவில் பகுதியிலுள்ள பாடசாலையில் இல்ல விளையாட்டு போட்டியுடன் இணைந்ததாக இடம்பெற்ற மரதன் போட்டியில் மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் தனியான விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.

இதேவேளை அதிகாரிகளை இன்றைய தினம் செவ்வாய் கிழமை அழைத்து சம்பவம் தொடர்பில் விளக்கம் கோரவுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாடசாலை இல்ல விளையாட்டு போட்டியுடன் இணைந்ததாக நேற்று காலை இடம்பெற்ற மரதன் போட்டியில் பங்கேற்றிருந்த குறித்த மாணவன் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

மேலதிக தகவல்களுக்கு 👇👇👇👇👇👇👇👇👇

திருக்கோவிலில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு : வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்