
திருக்கோவில் மாணவனின் இறுதி ஊர்வலம்
திருக்கோவிலில் நேற்று முன் தினம் திங்கட்கிழமை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்த மாணவனின் இறுதி ஊர்வலம் நேற்றைய தினம் செவ்வாய் கிழமை இடம்பெற்றது.
இளம் விளையாட்டு வீரன் ஜெயகுமார் விதுஜனின் எனும் பாடசாலை மாணவனின் இறுதி ஊர்வலமானது அன்னாரின் இல்லத்தில் இறுதிகிரியைகள்யாவும் இடம்பெற்று பிரதான வீதி ஊடாக வீதிவலமாக எடுத்து செல்லப்பட்டு திருக்கோவில் உதயசூரியன் மைதானத்தில் மாணவர்கள் மற்றும் பாடசாலை சமுகம் மற்றும் பொதுமக்களின் கல்விசார் அதிகாரிகளின் அஞ்சலிக்காக வைப்பட்டு பின்னர் நல்லடக்கத்திற்காக திருக்கோவில் பொது மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
இவ் இறுதி ஊர்பலத்தில் பாடசாலை மாணவர்கள் கல்விசார் அதிகாரிகள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.


