நிந்தவூர் : கார் விபத்தில் பிரதேச செயலக உத்தியோகத்தர் மரணம் -வீடியோ இணைப்பு

அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை நண்பகல் ஒருமணியளவில் இடம்பெற்ற விபத்தில் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாட்டுபளை பிரதான வீதியில் இவர் பயணம் செய்த சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரத்தில் இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

இச்சம்பவத்தில் திருக்கோவில் ஆலையடிவேம்பு பகுதியைச் சேர்ந்த சசிந்திரன் என்பவரே உயிரிழந்துள்ளதாக, தெரியவருகின்றது.

கல்முனையில் இருந்து திருக்கோயில் நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு கார் மரத்துடன் மோதியதில் காரை ஓட்டிச் சென்ற சாரதியான இவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் , கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் இந்து ஸ்வயம் சேவா சங்கத்தின் அக்கரைப்பற்று பொருப்பாளரும் ஆவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

திருக்கோவில் : கார் விபத்தில் பிரதேச செயலக உத்தியோகத்தர் மரணம்
திருக்கோவில் : கார் விபத்தில் பிரதேச செயலக உத்தியோகத்தர் மரணம்