திருக்கோவில் கடலில் நீராடச் சென்ற தந்தை மகன் உட்பட மூவர் காணாமல் போயுள்ளனர்!
-கல்முனை நிருபர்-
திருக்கோவில் சங்கமன்கண்டி உமிரி கடற்கரையில் நேற்று புதன்கிழமை மாலை கடலில் நீராட சென்ற மூவர் காணாமல் போயுள்ளதாக, திருக்கோவில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் தாண்டியடி உமிரி கடற்கரையில் நீராடச்சென்ற தந்தை மகன் மற்றும் அவர்களின் உறவினரின் மகன் என மூவர் காணாமல் போயுள்ளனர்.
தாண்டியடி உமிரி கிராமத்தை சேர்ந்த 38, 15, 18, வயதை சேர்ந்தவர்களே காணாமல் போயுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்