
திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் அமைந்துள்ள கடைகளை பார்வையிட்டார் கிழக்கு ஆளுநர்!
திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் அமைந்துள்ள கடைகளை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டதுடன், நகரப்புற மேம்பாட்டு ஆணையகத்தின் உதவியுடன் கடைகளை ஒழுங்குபடுத்துவது குறித்து உள்ளூர் அதிகாரிகள் மற்றும் வணிகர் சங்கத்துடன் கலந்துரையாடல் மேற்கொண்டார்.
இதில் மாகாண உள்ளூராட்சி அமைச்சின் பதில் செயலாளர் என். மணிவண்ணன், சுற்றுலா பணியகத்தின் தலைவர் ஏ.பி.மதனவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



