
திருக்கேதீச்சரத்தை போன்றே திருக்கோணேஸ்வரத்தின் திருப்பணிகளையும் செய்து தர வேண்டும் என கோரிக்கை!
-மூதூர் நிருபர்-
தென்கயிலை என போற்றப்படுவதும் ஐந்து ஈச்சரங்களில் ஒன்றானதும் திருஞான சம்பந்தரால் பாடல் பெற்றதுமான திருக்கோணேசுவரத்தின் திருப்பணிகள் நீண்ட காலமாக முடிவுறாமல் நிலுவையில் உள்ளன.
இந்திய அரசானது, மற்றுமொரு பாடல் பெற்ற தலமான திருக்கேதீச்சரர் கோவில் திருப்பணிகளை செய்து முடித்தது போல திருக்கோணேசுவரத்தின் திருப்பணிகளையும் செய்துதர வேண்டும், என வேண்டுமென திருகோணமலை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாஸன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த வகையில் இராசகோபுரம் அமைத்தல், மணிமண்டபம் அமைத்தல், சக்திபீடம் அமைத்தல் ,வெளி வீதி அமைத்தல், பஞ்சலிங்கங்களை திருநிலைப்படுத்தல், முதலிய திருப்பணிகளை விரைந்து செய்து முடிக்க ஆக்கமும் ஊக்கம் அளிக்க வேண்டும் என இந்திய அரசை வினையமாக வேண்டிக் கொள்கின்றேன் என அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
