திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவி கௌரவிப்பு!
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஏற்பாட்டில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த தி/ஸ்ரீ சண்முகா இந்து மகளீர் கல்லூரி மாணவி உ.அபிநயா இன்று திங்கட்கிழமை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வைத்து கௌரவிக்கப்பட்டார்.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம தலைமையிலும் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் ஒருங்கிணைப்பிலும் உ.அபிநயா மேலதிக பிரதிலாபக் கொடுப்பனவாக ரூபா 25,000 பெறுமதியான காசோலை வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் பல விடயங்கள் நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவ்வேலைத்திட்டமும் ஒன்றாகும்.
இந்நிகழ்வில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாவட்ட இணைப்பதிகாரி பா.சஜிக்கா மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர் எஸ்.புவகிதன் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்