திருகோணமலை மீனவர்களுக்கான நிரந்தர கட்டிடம் அமைத்து தருமாறு கோரிக்கை

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கப்பல்துறை மீனவர்களுக்கு மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்கின்ற போது இளைபாறுவதற்கு நிரந்தர கட்டிடம் ஒன்றினை அமைத்து தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

கப்பல் துறை பிரதேசத்தில் 85 ற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், 30-க்கும் மேற்பட்ட பெண்கள் மீன்பிடி தொழிலை முன்னெடுத்து வருகின்றனர்.

அதே வேளை காலையில் 6:00 மணிக்கு கடலுக்கு செல்லும் பெண் மீனவர்கள் மீண்டும் கரைக்கு வந்து இளைப்பாறுவதற்கும் தங்களது மீன்பிடி வலைகளை பாதுகாத்து வைப்பதற்கு நிரந்தர கட்டிடம் இல்லை எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனால் திருகோணமலை மாவட்டத்தில் பெண்கள் அதிகளவில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும், கப்பல் துறை கிராமத்தில் மீனவர்களுக்கு தேவையான சேவைகளை பெற்றுக் கொடுக்க அரச அதிகாரிகள் முன் வர வேண்டும் எனவும் தேர்தல் காலங்களில் மாத்திரம் தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதாக கூறிவிட்டு செல்வதாகவும் அப்பகுதியில் உள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே அப்பகுதி மீனவர்களின் நலன் கருதி இளைப்பாருவதற்கு நிரந்தர கட்டிடம் ஒன்றினை அமைத்து தருவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மீனவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

திருகோணமலை மீனவர்களுக்கான நிரந்தர கட்டிடம் அமைத்து தருமாறு கோரிக்கை
திருகோணமலை மீனவர்களுக்கான நிரந்தர கட்டிடம் அமைத்து தருமாறு கோரிக்கை