திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் உறவுகளின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்
-மூதூர் நிருபர்-
திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை மனித உரிமைகள் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
இதன்போது திருகோணமலை நகராட்சி மன்றத்திற்கு முன்னால் ஒன்றுகூடிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் அங்கிருந்து மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகம் வரை பதாகைகளை ஏந்தியவாறு நடைபவனியாக சென்றனர்.
பின்னர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு முன்னால் பதாகைகளை ஏந்தியும் கோசங்களை எழுப்பியவாறும் சில மணிநேரம் கவனயீர்ப்பில் ஈடுபட்டதோடு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்