
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கடமை ஆரம்ப நிகழ்வு
-கிண்ணியா நிருபர்-
2026 ஆம் ஆண்டுக்கான புதுவருடப்பிறப்பு மற்றும் கடமை ஆரம்ப நிகழ்வானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார தலைமையில் இன்று வியாழக்கிழமை திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றது.
குறித்த ஆரம்ப நிகழ்வானது மாவட்ட அரசாங்க அதிபரால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்காகவும் பல்வேறு அனர்த்தங்களில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, உத்தியோகத்தர்கள் அனைவரும் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
புதுவருடத்தை அர்ப்பணிப்பு, நேர்த்தி மற்றும் பொறுப்புணர்வுடன் ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தை மாவட்ட அரசாங்க அதிபர் தனது உரையில் வலியுறுத்தியதுடன், பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதன்போது மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



