திருகோணமலை மாவட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்-

கத்தார் தொண்டு நிறுவனத்தினால் (Qatar Charity) திருகோணமலை மாவட்டத்தில் சுய தொழிலில் ஈடுபடும் தேவைப்பாடுடைய முயற்சியாளர்களுக்கு சுய தொழில் உபகரணங்கள் மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் வழங்கி வைக்கப்பட்டது.

அரச சார்பற்ற நிறுவன ஒருங்கிணைப்பதிகாரி ஏ.எம்.எஸ்.பி. அத்தநாயக்க ஒழுங்கமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்விற்கு பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் கலந்து கொண்டதுடன் சுய தொழில் முயற்சியாளர்களுக்கான உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து கத்தார் தொண்டு நிறுவன (Qatar Charity) அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் தாரிக் மன்சூர் மற்றும் திட்ட உத்தியோகத்தர் பைசல் பரீட் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்ததுடன், சுய தொழில் முயற்சியாளர்களுக்கான உபகரணங்களையும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது சுய தொழில் முயற்சியாளர்களின் தேவைக்கு ஏற்ப தையல் இயந்திரங்கள், தானிய வகைகளை அரைக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட மேலும் பல பெறுமதி வாய்ந்த உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.