திருகோணமலை மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக்கூட்டம்

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார தலைமையில் நேற்று வியாழக்கிழமை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த கூட்டமானது மாவட்ட சிறுவர் அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகள், தற்போதைய நிலைமைகள், சவால்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் சம்பந்தப்பட்ட அரச துறைகள், கல்வி, சமூக சேவைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மேலும், சிறுவர் நலன், பாதுகாப்பு, கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் தங்களது அனுபவங்கள், கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை பங்காளர்கள் முன்வைத்தனர்.

சிறுவர் அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த செயல்பாடுகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டதுடன், எதிர்வரும் காலங்களில் செயல்திறன் மிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.