திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜீ.எம்.ஹேமந்த குமார ஒழுங்குபடுத்தலின் கீழ் வெளி விவகார வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதியமைச்சரும் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான அருண் ஹேமச் சந்திரா தலைமையில் இடம் பெற்றது.

இதில் கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகர ,திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாசன், இம்ரான் மஹ்ரூப்,ரொசான் அக்மீமன, உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள்,மாகாண பிரதம செயலாளர், திணைக்கள தலைவர்கள்,முப்படைகளின் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது கடந்த கால வேலைத் திட்டங்களை நடை முறைப்படுத்தியமை மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலும் மதிப்பீட்டு நடவடிக்கைகளும் இடம் பெற்றன.

வீதி உட்கட்டமைப்பு வசதிகளினை திருகோணமலை மாவட்டத்தில் அபிவிருத்தி செய்வது தொடர்பிலும் மக்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.