திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

-மூதூர் நிருபர்-

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமிந்த ஹெட்டியாரச்சி ஏற்பாட்டில், தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லா (பா.உ), கபில நுவான் அதுகோரல (பா.உ) கிழக்கு மாகான ஆளுனர் செந்தில் தொண்டமான் ஆகியோரின் இணைத் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்டத்தின் மக்கள் தேவையாக கருதிய பல முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அதற்கு சாத்தியமான தீர்வுகளும் எட்டப்பட்டன.

திருகோணமலையிலிருந்து வாகரை,மட்டக்களப்பு ,கல்முனை ,அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் வரை செல்லுகின்ற தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சேவை பேரூந்துகளினை தோப்பூர் கிராமத்தின் ஊடாக செல்வதற்கான அனுமதியை வழங்கல்.

தோப்பூர் மற்றும் புல்மோட்டை பிரதேசங்களில் தொடர்ச்சியான நீர் வழங்கலை விநியோகித்தல்

தோப்பூர் பிரதேசத்தில் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியின ஏ.டி.எம் இயந்திரத்தை உடனடியாக நிறுவுதல்.

தோப்பூர் அல்லைக் குளம் மற்றும் அதற்குரிய சிறிய வாய்க்கால்களை புனர்நிர்மாணம் செய்தல்.

குரங்கு பாஞ்சான் குளம் புணரமைப்பு சம்பந்தமான தற்போதைய நிலமை.

கிண்ணியா குறுஞ்சாக்கேணி பாலம் நிர்மாணம் சம்பந்தமான தற்போதைய நிலமையை அவதானிது அதற்கான தீர்வினை எட்டுதல்.

குச்சவெளி பிரதேசத்திற்கு தனியான கல்வி வலையத்தினை நிறுவுதல்.

புல்மோட்டை பிரதேசத்தில் இயங்கி வந்த VTA பயிற்சி நிலையத்தை மீள ஆரம்பித்தல்.

கிண்ணியா மற்றும் மூதூர் பிரதேசங்களை நவீண நகரமாக மாற்றுதல். அதற்கான திட்டமிடலை நகர அபிவிருத்தி அதிகார சபையின் உதவியுடன் மேற்கொள்ளல்

வெள்ளை மணல் பிரதேசத்திர் ஆரம்ப கல்வி பாடசாலையை உருவாக்குதல்.

போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டு காத்திரமான தீர்வுகளும் எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.