
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு ஆளுனரால் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு
-திருகோணமலை நிருபர்-
கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தலைமையில் திருகோணமலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பிரதேச ஊடகவியலாளர்களுக்கான வாழ்வாதார உதவி கொடுப்பனவு வழங்குவதற்கான விண்ணப்பப்படிவங்கள் வழங்கும் நிகழ்வு மாகாண ஆளுனர் தலைமையில் இடம் பெற்றன.
திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் கடந்த சனிக்கிழமை மாலை இடம் பெற்ற குறித்த நிகழ்வில் தலா 50ஆயிரம் ரூபா என்றவாறு 30 ஊடகவியலாளர்களுக்கு கொடுப்பனவு வழங்குவதற்கான விண்ணப்பப்படிவங்கள் வழங்கப்பட்டன.
ஊடகவியலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு இது வழங்கப்பட்டன.
இதில் மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் ஏ.பி.மதனவாசன் உட்பட பிரதேச ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
