திருகோணமலை மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய்- யான்ஓயா மற்றும் பதவியா நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது .

இதன் அடிப்படையில் இன்று ஞாயிற்று கிழமை காலை 6 மணி அளவில் பதவியா நீர்த்தேக்கத்தின் இரண்டு கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.

மேலும் யான்ஓயா நீர் தேக்கத்தின் ஐந்து கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன் மூன்று கதவுகள் 450 மில்லி மீட்டரிலும், இரண்டு கதவுகள் 200 மில்லி மீட்டரிலும் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.