திருகோணமலை மாவட்டத்தில் அபிவிருத்திக்கு சகல துறைகளுக்கும் பங்களிப்பு வழங்கப்படும்
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை மாவட்டத்தில் அபிவிருத்தியடைய கூடிய சகல துறைகளுக்கும் தங்களது பங்களிப்பு வழங்கப்பட்டு எதிர்காலத்தில் செயற்படுவோம் என திருகோணமலை மாவட்ட வர்த்தக சபையின் செயலாளர் மார்ட்டின் ஜீ.ஜெயகாந்த் தெரிவித்தார்.
திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இதில் குறித்த சபையின் தலைவர் ராஜா ராம் மோகன் உள்ளிட்ட சக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்தும், திருமலை மாவட்டம் முழுதும் எங்களது சமூக அபிவிருத்திகளை அரசாங்க துறைசார் அதிகாரிகளூடன் இணைந்து முன்னெடுக்கவுள்ளோம் கடந்த காலங்களில் முன்னெடுத்துள்ளோம். கிழக்கு மாகாண ஆளுனர் அவர்களை சந்தித்து புதிய பல திட்டங்களை முன்வைத்தும் செயற்பட காத்திருக்கிறோம்.
இது போன்று மாவட்ட செயலாளர் அவர்களுடன் இணைந்து பணிகளை முன்னெடுப்பதுடன் சமூகத்தில் வாழும் விழிம்பு நிலை மக்களின் தேவைகளை அறிந்தும் வர்த்தக கட்டிட பல துறை சார்ந்த விடயங்களை எதிர்காலத்தில் திறம்பட ஒத்துழைப்பின் ஊடாக வழங்கவுள்ளோம், என்றார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்