
திருகோணமலை மாநகர மக்களுக்கு நன்றி தெரிவித்த மாநகர முதல்வர்
திருகோணமலை மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மூதூர், வெருகல் பிரதேச மக்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு திருகோணமலை மாநகர சபை நடவடிக்கை எடுத்தபோது திருகோணமலை மாநகர மக்கள், நண்பர்கள் நிவாரண நடவடிக்கைக்கு உணவுப்பொருட்களையும் அத்தியாவசிய பொருட்களையும் வழங்கியிருத்தனர் என திருகோணமலை மாநகர முதல்வர் க.செல்வராஜா (சுப்ரா) இன்று புதன்கிழமை மாநகர மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இந்த நிவாரண நடவடிக்கையில் மாநகர சபையின் உறுப்பினர்கள், ஆணையாளர், செயலாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக எனது தலைமையில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
நிவாரணப் பொருட்களை மூதூர், வெருகல் பிரதேச மக்களுக்கு விரைவாக வழங்கக் கூடிய வகையில் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் ஊடகத்தின் மூலம் நன்றி தெரிவிக்கின்றோன் என இன்று இடம் பெற்ற ஊடக சத்திப்பில் கருத்து தெரிவித்தார்.
