திருகோணமலை பெருந்தெரு விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் வருடாந்த மாணவர் சந்தை

-கிண்ணியா நிருபர்-

மாணவர்களது திறன் மேம்பாட்டுக்காக திருகோணமலை பெருந்தெரு விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் வருடாந்த மாணவர் சந்தை வித்தியாலய அதிபர் திருமதி சனில்குமார் தலைமையில் நேற்று புதன்கிழமை இடம் பெற்றது.

இந்த நிகழ்வுக்கு திருகோணமலை மாநகர சபை முதல்வர் கந்தசாமி செல்வராஜா (சுப்ரா) மாநகர சபை உறுப்பினர்களான ஜெயசீலன் நாக அர்ச்சூன், உதயகுமார் அஜித்குமார் மற்றும் உப்புவெளி பிரதேச சபை உறுப்பினர் பாஸ்கரன் சுதர்சன் ஆகியவர்கள் விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்தனர்.

இதன் பொழுது பாடசாலை சமூகம் சார்பில் மலர் மாலைகள் அணிவிக்கப் பட்டு நினைவு சின்னங்கள் வழங்கி அவர்கள் கௌரவிக்கப் பட்டனர்.

மேலும் இந்த நிகழ்வில் பழைய மாணவர் சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், நலன் விரும்பிகள், மாணவர்கள், பெற்றோர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.