திருகோணமலை பத்தாம் குறிச்சி அறிவு ஒளி மையத்தின் முத்தமிழ் மாணவர் மன்றம்

-மூதூர் நிருபர்-

திருகோணமலை பத்தாம் குறிச்சி அறிவு ஒளி மையத்தின் முத்தமிழ் மாணவர் மன்றமானது நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வின் போது மாணவர்களது தனித் திறன்கள் வில்லுப்பாட்டு, கதை, கவிதை, பாட்டு நாடகம் என இயல் இசை நாடகம் ஆகிய செயற்பாடுகள் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டன.

இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக சோசியல் டெவலெப்மென்ட் பௌண்டேசன்(social development foundation) நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் திரு. குணபாலன் நிரோஷன், திருகோணமலை சமூக செயற்பாட்டாளர் இணையத்தின் செயலாளர் திரு.கஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

அறிவு ஒளி மையத்தின் நிறுவனர் உதயகுமார் அஜித் குமார், விவேகானந்தா மீனவர் சங்கத் தலைவர் கீராலன், மகளிர் சங்கத் தலைவி கலாரூபன் தர்சினி, அறநெறிப் பாடசாலை ஆசிரியர் இளங்கோவன் ஜெயவதணி, அறிவு ஒளி மையத்தின் நிர்வாகச் செயலாளர் புகழ் வேந்தன் டிலக்ஷிகா ஆகியோர் பங்கு பெற்றிருந்தனர்.

மேலும் இந்த நிகழ்வில் முத்தமிழ் மாணவர் மன்றத்தின் தலைவர் செந்தூரன் வர்ஷனன் , துணைத் தலைவர் பு. ஜனுர்ஷிகா, பொதுச் செயலாளர் இளங்கோவன் ரிஷிகவி, பொருளாளர் தினேஷ் குமார் சாத்விகா உட்பட்ட அனைத்து நிர்வாக உறுப்பினர்களும் சிறப்பான முறையில் ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்