திருகோணமலை -நிலாவெளி பகுதியில் தீப்பற்றிய முச்சக்கர வண்டி!

திருகோணமலை -நிலாவெளி பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு முச்சக்கர வண்டியொன்று தீப்பற்றி எரிந்து சேதமாகியுள்ளது.

முச்சக்கர வண்டியில் பரவிய தீயினை கட்டுப்படுத்த பொதுமக்கள் முனைந்தபோதும் முச்சக்கர வண்டியின் பெரும்பகுதி தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரியவருகிறது.

தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.

சம்பம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை -நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.