திருகோணமலை நகர் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு : 15 கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகளின் வழிநடத்தலில் நேற்று செவ்வாய்க்கிழமை நகர் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
திருகோணமலை நகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட, மட்டிக்களி, மட்கோ நீதிமன்ற வீதி, தபால் கந்தோர் வீதி போன்ற பிரதேசங்களில் நடாத்தப்படும் 33 வியாபார நிலையங்களில் இவ்வாறு திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, சுகாதார நடவடிக்கைகளை பேணாத 15 கடைகளுக்கு எதிராக, சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.