திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம்

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக பிரதேச முகாமைத்தைவ கணக்காய்வு குழு கூட்டம் பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று புதன்கிழமை இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த கூட்டத்தில் திருகோணமலை மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர் பா.கேதீஸ்வரன் கலந்து கொண்டார்.

இதில் 2ம் காலாண்டுக்கான வெளிக்கள உத்தியோகத்தர்களினால் செயற்பாட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் மீதான மதிப்பீடு மீளாய்வு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், கணக்காய்வு அத்தியட்சகர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர் உட்பட கிளை தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.