திருகோணமலை டொக்டர் ஞானசேகரன் முன்பள்ளி பாலர் பாடசாலையின் வித்தியாரம்ப விழா

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலையில் இயங்கிவரும் டொக்டர் ஞானசேகரன் முன்பள்ளி பாலர் பாடசாலையின் புதிய மாணவர்களை இணைக்கும் வித்தியாரம்ப விழா நேற்று புதன் கிழமை இடம் பெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் அன்புவெளி புரம் வட்டார கிளை தலைவர் கு. தனராஜ் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் கலந்து சிறப்பித்தார்.

இதன் போது சுமார் 29 மாணவர்களுக்கான தலா ஆயிரம் ரூபாய் பெறுமதியான சேமிப்பு கணக்கு திறப்பதற்கான காசோலைகள் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனால் வழங்கப்பட்டன.

நிகழ்வில் பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்