
திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 96 வது கல்லூரி தினம்
திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 96 வது கல்லூரி தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
கல்லூரியின் முதல்வர் எ.சி.எம் சாலி தலைமையில் ஆரம்பமான 96 ஆவது கல்லூரி தினம் போதை ஒழிப்பு, டெங்கு நுளம்பிலிருந்து பாதுகாப்பு, இயற்கை வளங்களை பாதுகாத்தல் எனும் தொனிப் பொருளில் ஆரம்பிக்கப்பட்டது.
பொது மக்களுக்கு விழிப்புணர்வுட்டும் வகையில் ஊர்வலம், கடற்கரை சுத்தப்படுத்தல் மற்றும் மரம் நடுகை போன்ற நிகழ்வுகளுடன் மேற்படி கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த கல்லூரி தினம் பாடசாலையின் அனைத்து மாணவர்களின் பங்களிப்புடன் ஆசிரியர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், முன்னாள் மாணவர் ஒன்றியத்தினர்,பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

