‘திருகோணமலை சிறப்பிதழ்’ வெளியீட்டு விழா

 

-கிண்ணியா நிருபர்-

வாசல் வாசகர் வட்டத்தின் வெளியீடான வாசல் கவிதை சஞ்சிகை வெளியீட்டு விழாநாளை சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு திருகோணமலை மாநகர சபை பொது நூலக கேட்போர் கூடத்தில் வாசல் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வு, வாசல் வாசகர் வட்டத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் அரசரெத்தினம் அச்சுதனின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்விற்கு, பிரதம விருந்தினராக திருகோணமலை சேனையூர் அனாமிகா கலை பண்பாட்டு மையத்தின் தலைவர் கலாபூஷணம் இரா.இரத்தினசிங்கம் கலந்து கொள்ளவுள்ளதுடன், சிறப்பு விருந்தினர்களாக திருகோணமலை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளர்களான நீங்களும் எழுதலாம் சஞ்சிகையின் ஆசிரியர் கவிஞர் எஸ்.ஆர்.தனபாலசிங்கம், கவிஞர் செ.ஞானராசா, கவிஞர் ஜெனீரா தௌபீக் ஹைருள் அமான் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

பிரதம ஆசிரியர் உரையினை வாசல் கவிதை சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் ஊடகவியலாளர் ச.திருச்செந்தூரன் நிகழ்த்தவுள்ளதுடன், ‘வாசல் நோக்கு’ என்ற தலைப்பில் சிறப்புரையினை திருகோணமலை தமிழ்ச்சங்கத்தின் தலைவர் மூத்த எழுத்தாளர் கலாபூஷணம் திருமலை நவம் அவர்கள் ஆற்றவுள்ளார்.

இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளர்களான நீங்களும் எழுதலாம் சஞ்சிகையின் ஆசிரியர் கவிஞர் எஸ்.ஆர்.தனபாலசிங்கம், கவிஞர் செ.ஞானராசா, கவிஞர் ஜெனீரா தௌபீக் ஹைருள் அமான் ஆகியோர் ‘கலைக்கேசரி’ விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.