
திருகோணமலை-கொழும்பு இரவு நேர புகையிரத சேவையை ஆரம்பிக்குமாறு பயணிகள் கோரிக்கை
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை -கொழும்புக்கு இடையிலான இரவு நேர புகையிரத சேவையை, மீள ஆரம்பிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நாட்டில் அண்மையில் நிலவிய, சீரற்ற காலநிலை மற்றும் திட்வா புயல் காரணமாக, குறித்த இரவு நேர சேவை இடைநிறுத்தப்பட்டிருந்தது.
திருகோணமலை மாவட்டத்தில் கொழும்புக்கான புகையிரத சேவையில், பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் தான் அதிகளவான மக்கள் பயணிக்கின்றனர்.
உள் நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், இரவு நேர சேவை மூலமே திருகோணமலை -கொழும்பு சேவையில் பயணிக்கின்றனர்.
இரவு நேர சேவையில் குளிரூட்டப்பட்ட முதலாம் தர பெட்டி காணப்படுவதனால், அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் கொழும்பில் இருந்து இரவு நேர புகையிரதத்திலேயே திருகோணமலையை வந்தடைகின்றனர்.
ஆகவே, புகையிரத திணைக்களம் இவற்றை கொண்டு, இரவு நேர புகையிரத சேவையை தாமதப்படுத்தாது மீள உடனடியாக ஆரம்பிக்க வேண்டும், என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
