திருகோணமலை கடினப்பந்து மகளிர் அணி விடுத்துள்ள வேண்டுகோள்!
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை நகரில் புதிதாக கடின பந்து மகளிர் அணி உருவாக்கப்பட்டு தற்போது பயிற்சி பெற்று வரும் நிலையில், தங்களுக்கான வெளி இடங்களுக்கு சென்று பூரணமான விளையாட்டு துறையில் ஈடுபாடு காட்ட உதவி செய்யுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
தினமும் திருகோணமலை நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் திறம்பட பயிற்சி பெற்று வந்தாலும் தங்களுக்கான உபகரணங்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
தற்போது வரை 18 பெண்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர், திருகோணமலையில் கடின பந்து மகளிர் அணியினரை ஊக்குவித்து தேசிய மட்டம் வரை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.