திருகோணமலை கடற்பரப்பில் கரையொதுங்கும் மீன்கள்

திருகோணமலை கடற்பரப்பில் அதிகளவான சிறிய மீன்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் நாரா நிறுவனத்திடம் வினவப்பட்டுள்ளதாகக் கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, குறித்த பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட இயற்கை காரணங்களால் இவ்வாறு மீன்கள் இறந்திருக்கலாம் என நாரா நிறுவனம் அறியப்படுத்தியுள்ளதாகக் கடற்றொழில் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க