திருகோணமலை -இலங்கைத்துறை முகத்துவாரம் இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வு
-மூதூர் நிருபர்-
“பெண்களாகிய நாம் ஒரே மூச்சுடன்.அவள் எழும்பும்போது நாடும் எழும்” எனும் தொனிப் பொருளின் கீழ் மகளிர் தின நிகழ்வு திருகோணமலை -இலங்கைத்துறை முகத்துவாரம் இந்துக் கல்லூரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்ட விசேட தேவையுடைய மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவி சுகிர்தபிரியா மீராஜி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது பெண்களின் கலை, கலாசார நிகழ்வுகள், அத்தோடு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்கள் கௌரவிப்பு என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக, கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலை கலாச்சார பீடாதிபதி பாலசுகுமார் கலந்து சிறப்பித்தார்.

அதிதிகளாக, சமூக சேவை திணைக்கள நிலையப் பொறுப்பதிகாரி சுகந்தினி, திருக்கோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி நாகேந்திரன் ஆஷா, சம்பூர் ஆலங்குளம் மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் காளிராசா சுஜாந்தினி, இலங்கைத்துறை முகத்துவாரம் இந்துக்கல்லூரி அதிபர், கலாபூசணம் இரத்தினசிங்கம், சட்டத்தரணி முஹமட், திருகோணமலை மக்கள் மறுமலர்ச்சி மன்ற தலைவர் பிரபாகரன், பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருத்தமை குறிப்பிடத்தக்கது.




