திருகோணமலையில் 54 பேர் கைது
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை ஜமாலியா கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முற்பட்ட 54 பேரை கடற்கரையினர் நேற்று சனிக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.
கடற் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக, இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், கைது செய்யப்பட்டவர்களில் மூன்று சிறுவர்கள், ஆறு பெண்கள் அடங்குவதாகவும் கடற்படையின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட குறித்த நபர்களை தற்போது திருகோணமலை கடற்படை முகாமில் தடுத்து வைத்து வாக்குமூலம் பெற்று வருவதுடன், இன்று மாலை திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.