
திருகோணமலையில் வீடொன்றின் மீது பெற்றோல்குண்டு தாக்குதல்!
-மூதூர் நிருபர்-
திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் உள்ள பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று வியாழக்கிழமை அதிகாலை பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் போது வீட்டின் உடைமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது, முன்பகையின் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
