-மூதூர் நிருபர்-
திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள, பூமரத்தடிச்சேனை பகுதியிலுள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்து, இன்று வியாழக்கிழமை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது, மோட்டார் குண்டுகள் 04, மோட்டார் குண்டு சாஜ்ஜர் -02, ரீ-56 ரக துப்பாக்கித் தோட்டாக்கள் 75 மீட்கப்பட்டுள்ளன.

வாகரை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த இடத்தில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டபோது இப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட ஆயுதங்கள் ஈச்சசிலம்பற்று பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன .
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

