மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!

-திருகோணமலை நிருபர்-

மின்னல் தாக்கியதில் கன்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக கன்தளாய் வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் அக்போபுர-படுகச்சிய பகுதியைச் சேர்ந்த முகம்மது லத்தீப் முஹம்மது மபாஸ் (36வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் அக்போபுர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்